மின் கட்டண உயர்வு, அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடளாவிய ரீதியில் பல...
மின் கட்டண உயர்வு, அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப் புறக்கணிப்பு, சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
அத்துடன் பல இடங்களில் எதிர்ப்பு பேரணிகளும் இடம்பெறவுள்ளன.
மின்சாரம், பெற்றோலியம், நீர், துறைமுகங்கள், வங்கிகள் உட்பட அத்தியாவசிய சேவைகள் துறையைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளன.