ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைநகர் கோவளம் பகுதியில் நேற்று மாலை திருட்டில் ஈடுபட்ட ஐவரடங்கிய கும்பலொன்று அப்பகுதி மக்களால் மடக்கி...
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைநகர் கோவளம் பகுதியில் நேற்று மாலை திருட்டில் ஈடுபட்ட ஐவரடங்கிய கும்பலொன்று அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
சுழிபுரம் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த ஐவரடங்கிய இளைஞர் குழுவொன்று இவ்வாறு பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டனர்.
காரைநகர் மணற்காடு அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் கோவளப்பகுதி மக்களின் திருவிழா இடம்பெறுகின்ற நிலையில் குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.