பிரபல போதைப்பொருள் வியாபாரியான ஹைபிரிட் சுத்தா என்பவரின் மனைவி என்று என்று கூறப்படும் பிரபல நடிகை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வாக்குமூலம்...
பிரபல போதைப்பொருள் வியாபாரியான ஹைபிரிட் சுத்தா என்பவரின் மனைவி என்று என்று கூறப்படும் பிரபல நடிகை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கூறப்படும் ஹைபிரிட் சுத்தா, சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தின் குறித்த நடிகைக்கு வாங்கிய வீடு தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கடந்த வெள்ளிக்கிழமை (3) அவருக்கு அழைப்பாணை விடுத்திருந்த போதிலும், நடிகை ஆஜராகாததால், இந்த வாரம் மீண்டும் வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடிகைக்கு தென் மாகாணத்தில் ஒரு வீடும், பிலியந்தலை பகுதியில் ஒரு வீடும் உள்ளதாக தெரியவந்துள்ளது