யாழ்ப்பாணம் நெடுந்தீவின் மேற்கே கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 62 கிலோகிராமிற்கும் அதிகமான கேரள கஞ்ச...
யாழ்ப்பாணம் நெடுந்தீவின் மேற்கே கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 62 கிலோகிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் சரக்குகளை ஏற்றிச் சென்ற இந்திய டவ் கப்பலுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கப்பலின் 23 பொட்டலங்களில் பொதி செய்யப்பட்ட 65 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த நடவடிக்கையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என நம்பப்படுகிறது.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கஞ்சா மற்றும் இந்திய டவ் கப்பல் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.