யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிள்ளையார் ஆலயமானது கும்பாபிஷேகத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டு விசேட வழிபாடுகள் இடம்பெ...
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிள்ளையார் ஆலயமானது கும்பாபிஷேகத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றது.
பிறந்துள்ள சோபகிருது ஆண்டான இன்றைய நாளில்(14) சிறைப்பட்டு இருக்கும் காலத்தில் கூட தங்கள் இறை வழிபாடுகளை தடையின்றி மேற்கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் சி.அமரசிங்கத்தின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் குறித்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.