யாழ்.உடுவில் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் ஆசிரியரினால் துன்புறுத்தலுக்கு உள்ளான மாணவி ஒருவர் சம்பவம் தொடர்பாக மாணவி சுன்னாகம...
யாழ்.உடுவில் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் ஆசிரியரினால் துன்புறுத்தலுக்கு உள்ளான மாணவி ஒருவர் சம்பவம் தொடர்பாக மாணவி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தகாத வார்த்தைகளால் துன்புறுத்தல் செய்ததாக பாடசாலை மாணவி அதிபரிடம் முறையிட்டதாகவும், அதற்கு நடவடிக்கை எடுக்காத நிலையில் மாணவியை பாடசாலையை விட்டு விலக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணவி சார்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.