MIOP அல்லது பண்டி உர மூட்டை ஒன்றின் விலையை 4 ஆயிரத்து 500 ரூபாவினால் குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹ...
MIOP அல்லது பண்டி உர மூட்டை ஒன்றின் விலையை 4 ஆயிரத்து 500 ரூபாவினால் குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் 50 கிலோகிராம் உர மூடை 18 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதால் அதற்கான செலவை விவசாயிகள் செலுத்த முடியாதுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.