யாழ்ப்பாணம் மல்லாகம் சந்தியில் கால்நடை வளர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று திங்கட்கிழமை காலை மேற்கொண்டனர். வலிகாமம் வடக்கு பகுதிகளில் வா...
யாழ்ப்பாணம் மல்லாகம் சந்தியில் கால்நடை வளர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று திங்கட்கிழமை காலை மேற்கொண்டனர்.
வலிகாமம் வடக்கு பகுதிகளில் வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்படும் மாடுகள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதை எதிர்த்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்ட இடத்தில் பசு ஒன்றையும் கட்டி போராட்டகாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் செய்த இடத்திலிருந்து காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு சென்று மகஜரையும் கையளித்தனர்.