டுவிட்டரில் ப்ளூ டிக் அங்கிகாரத்திற்கு கட்டணம் செலுத்தாத பல பிரபலங்கள் அந்த அங்கிகாரத்தை இழந்துள்ளனர். ப்ளூ டிக் அங்கிகாரத்திற்கு கட்டணம் செ...
டுவிட்டரில் ப்ளூ டிக் அங்கிகாரத்திற்கு கட்டணம் செலுத்தாத பல பிரபலங்கள் அந்த அங்கிகாரத்தை இழந்துள்ளனர்.
ப்ளூ டிக் அங்கிகாரத்திற்கு கட்டணம் செலுத்தாத ட்விட்டர் கணக்குகளுக்கு கடந்த வாரம் கெடு திகதி நிர்ணயித்திருந்தார் ட்விட்டரின் CEO எலான் மஸ்க்.
ஏப்ரல் 20-ம் திகதிக்குப் பின்னர் சந்தா செலுத்தப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே ப்ளூ டிக் அங்கிகாரம் வழங்கப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது சந்தா செலுத்தாத பயனர்களின் ப்ளூ டிக் அங்கிகாரம் நீக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பிரபலமாக அறியப்படும் பாப் நட்சத்திரம் பியோனஸ், போப் பிரான்சிஸ், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ரியாலிட்டி டிவி பிரபலம் கிம் கர்தாஷியன் ஆகியோர் ப்ளூ டிக் அங்கீகாரத்தை இழந்துள்ளனர்..
ஷாருக்கான், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், விஜய், ஆலியா பட், சிம்பு, விஜய் சேதுபதி, கார்த்தி, நயன்தாரா உட்பட இந்திய திரை பிரபலங்கள்.
ரோகித் சர்மா, விராட் கோலி என இந்திய விளையாட்டு பிரபலங்கள். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ட்விட்டர் தளத்தில் ப்ளூ டிக் அங்கிகாரத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.