கந்தானை பகுதியில் இயங்கிவந்த ஸ்பா (spa) ஒன்றில் 42 வயதுடைய திருமணமான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கந்தானை, நாகொட பிரத...
கந்தானை பகுதியில் இயங்கிவந்த ஸ்பா (spa) ஒன்றில் 42 வயதுடைய திருமணமான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கந்தானை, நாகொட பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் நேற்று நள்ளிரவு ஸ்பாவுக்கு சென்றுள்ளார். பின்னர் இன்று காலை குறித்த நபர் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.