ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்.ஊடக அமையத்தில் இன்று (31) பிற்பகல் 3 மணியளவில் இட...
ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்.ஊடக அமையத்தில் இன்று (31) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் திருவுருவப் படத்துக்கு யாழ்.ஊடக அமையத்தின் இணைப்பாளரும் மூத்த ஊடகவியலாளருமான கு.செல்வக்குமார் மலர் மாலை அணிவிக்க, பொதுச் சுடரை யாழ்.ஊடக அமையத்தின் பொருளாளரும் ஊடகவியலாளருமான கம்சன் ஏற்றி வைக்க, ஊடகவியலாளர்கள் மலர் தூவி நினைவு கொண்டனர்.
சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசன் தொடர்பில் அவர் காலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர் செல்வக்குமார் குறிப்பிடும் போது 2004 ஆம் ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு 2023 ஆம் ஆண்டு இன்றுடன் 19 ஆண்டுகளை கடக்கும் போதும் சுடப்பட்ட அன்றைய நாள் தான் நினைவில் வருகிறது. இத்தனை வருடங்கள் கடந்தும் நீதி கிடைக்காமல் தொடர்ந்தும் அவரின் பாதையில் நாம் பயணிக்கும் போது அச்ச உணர்வுதான் இன்றும் எழுகிறது.
நாளை இவரின் பாதையில் பயணிக்கும் ஊடகவிலாளர்களுக்கு என்ன நடக்குமோ என்ற நம்பிக்கை இல்லாத காலத்தில் இருக்கிறோம். ஏனெனில் சுடப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பில் முதற்கட்ட விசாரணையையே ஆரம்பிக்காத இந்த அரசுகளால் ஊடகவியலாளர் மத்தியில் அச்ச உணர்வு இன்றும் தொடர்கிறது என்றார்.