இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு விசேட சலுகைகள் அடங்கிய கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் வெளியிட்...
இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு விசேட சலுகைகள் அடங்கிய கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளது.
கொள்கை அடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த கடன் வழங்கப்படவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கைக்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக கிடைக்கப்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த கடனானது சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கடன் வசதியுடன் தொடர்புடையதாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.