கடவுச்சீட்டுகளை தாமதமின்றி பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டிற்காக 50 புதிய நிலையங்களை ஜூன் மாத இறுதிக்குள் நிறுவும் அதேவேளை, இந்த வருட இறுதிக்குள...
கடவுச்சீட்டுகளை தாமதமின்றி பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டிற்காக 50 புதிய நிலையங்களை ஜூன் மாத இறுதிக்குள் நிறுவும் அதேவேளை, இந்த வருட இறுதிக்குள் இ- கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை சேகரிக்க ஐம்பது மாவட்ட செயலகங்களில் 50 புதிய நிலையங்கள் நிறுவப்படும் என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அத்தோடு தேசிய அடையாள அட்டைகள் வழங்குவதற்கு மேலும் ஐந்து கிளைகளும் இதனுடன் இணைக்கப்பட்டவுள்ளதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கடவுச்சீட்டு வழங்கும் புதிய நடைமுறை மூன்று நாட்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.