உரும்பிராயில் 50 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 28 வயதுடைய பெண் ஒருவர் கைது கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ...
உரும்பிராயில் 50 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 28 வயதுடைய பெண் ஒருவர் கைது
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் 50 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 28 வயதுடைய பெண்ணொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு நான்கு மாதங்கள் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளதோடு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் ஹெரோயின் போதைப் பொருளுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரும் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு தற்பொழுது சிறைவாசம் அனுபவித்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்
கைது செய்யப்பட்ட பெண் விசாரணையின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர்,