புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை(22) இடம்பெறவுள்ளது....
புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை(22) இடம்பெறவுள்ளது.
காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
முன்னாள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மே 15ம் திகதி ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டநிலையில் மே 17 ம் திகதி பி.எஸ்.எம்.சாள்ஸ் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.