பாணந்துறை, கெசல்வத்த பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதியை சுற்றிவளைத்த காவல்துறையினர் இரண்டு பெண்கள் ...
பாணந்துறை, கெசல்வத்த பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதியை சுற்றிவளைத்த காவல்துறையினர் இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வடக்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நிறுவன உரிமையாளர், வைத்தியர் என கூறிக்கொள்ளும் நபர் மற்றும் விபசாரத்தில் ஈடுபட தயாராக இருந்த இரண்டு பெண்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இரு பெண்களும் அகலவத்தை மற்றும் பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களது கைப்பைகளை பரிசோதித்த போது, இருபதுக்கு மேற்பட்ட கருத்தடை உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இந்த நிலையம் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாகவும், நிலைய பொறுப்பதிகாரி சஞ்சீவ லக்மாலுக்கு கிடைத்த உடனடி தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை சுற்றிவளைப்பு
ஆயுர்வேத மசாஜ் நிலையம் என இயங்கிய விபசார விடுதி - சுற்றிவளைத்தது காவல்துறை | Selling Women Under The Guise Of Massage
ஒரு மணித்தியாலத்திற்கு இரண்டாயிரம் ரூபாவிற்கு பெண் ஒருவர் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், தகவல் கிடைத்ததும் காவல்துறை உத்தியோகத்தர்கள் சுற்றிவளைத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சமந்த வெதகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், உதவி காவல்துறை அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்ன, நிலைய பொறுப்பதிகாரி பரிசோதகர் சஞ்சீவ லக்மாலின் வழிகாட்டலின் கீழ், நிலைய பொறுப்பதிகாரி சிறுவர் மற்றும் பெண்கள் பணியக உப பரிசோதகர் பத்மினி, சார்ஜன்ட் நந்தசிறி (50690), கான்ஸ்டபிள் வருண்வன சுமித் (32119) , ரமணி (9029), திலினி (7106) மற்றும் பிற அதிகாரிகள் சோதனையில் இணைந்தனர்