வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் வேகமாக அதிகரித்து ...
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள்
தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பிரதிப் பொது முகாமையாளர் காமினி சேனாரத்யபா இவ்வாறு தெரிவித்தார்.
அந்தவகையில் இவ்வருடம் மாத்திரம் 1,150 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மேலும் இவ்வாறான மோசடிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும், அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.