இந்தியா - உத்தரபிரதேசம் மாநிலம் மிர்சாபூரை சேர்ந்த நடிகை அகன்ஷா துபே சில மாதங்களுக்கு முன்னர் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட...
இந்தியா - உத்தரபிரதேசம் மாநிலம் மிர்சாபூரை சேர்ந்த நடிகை அகன்ஷா துபே சில மாதங்களுக்கு முன்னர் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மொடலாக வலம்வந்த அகன்ஷா துபே, 17 வயதில் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில், சில படங்களில் நடித்து வந்த அகன்ஷா துபே, வாரணாசியில் படப்பிடிப்புக்காக சென்றிருந்த போது கடந்த மார்ச் 26-05-2023 திகதி அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரது மரணம் போஜ்புரி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இவ்வாறான நிலையில் தனது மகளின் மரணத்திற்கு அவளது காதலன் சமர் சிங் மற்றும் சகோதரர் சஞ்சய் தான் காரணம் என தாய் குற்றச்சாட்டிய நிலையில் அவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
இருப்பினும், தன்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்யவில்லை என அவரது தாயாரின் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது அகன்ஷா துபேவின் உள்ளாடையில் விந்தணுக்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் அதிகாரி டிசிபி அமித்குமார் கூறுகையில்,
அகன்ஷாவின் உள்ளாடைகள் உட்பட அவரது ஆடையில் விந்தணுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சமர் சிங், சஞ்சய் சிங், சந்தீப் சிங் மற்றும் அருண் பாண்டே ஆகியோரது உயிரணுக்களுடன் ஒத்துப்போகிறதா என்பதை கண்டறிய சோதனை நடத்தப்படவிருக்கிறது,
அதற்கான அனுமதியும் கோரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். தற்கொலை செய்து கொண்டதற்கு முன்பாக இன்ஸ்டாகிராமில் லைவ்வில் வந்த நடிகை அகன்ஷா துபே கதறி அழுதமை குறிப்பிடத்தக்கது.