இலங்கையில் இனப்படுகொலை செய்த படையினரை நினைவுகூரும் நினைவுத் தூபியில் தமிழர்களையும் நினைவு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அதனை வன்மையாக க...
இலங்கையில் இனப்படுகொலை செய்த படையினரை நினைவுகூரும் நினைவுத் தூபியில் தமிழர்களையும் நினைவு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.
ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக சந்திப்பு யாழில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
மேலும் தெரிவிக்கையில்,அனைத்து இனத்தவர்களும் நினைவு கூருவதற்கான பொதுவான நினைவுத்தூபி அமைக்கும் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பொதுநினைவுத்தூபி என்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை வெகுவாகப் பாதிக்கும் செயற்பாடு என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் இனவாதியான சரத்வீரசேகர அண்மைக்காலமாக தமிழ் மக்களை மிரட்டும் தொனியில் கருத்துகளை வெளியிடுவதாகவும் அவ்வாறு வெளியிடும் கருத்துக்களை இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் – இந்தியாவுடன் பேசினோம் என்பதற்காக இந்திய நிகழ்ச்சி நிரலில் செயற்படவேண்டிய தேவை எமக்கில்லை – என்றார்