சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு தாதிய உத்தியோகத்தர்களுக்கென விசேடமாக அறிமுகப்படுத்தப்பட்ட கடன் அட்டை வழங்கும் அங்குரார்ப்பன நிகழ்வு யாழி...
சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு தாதிய உத்தியோகத்தர்களுக்கென விசேடமாக அறிமுகப்படுத்தப்பட்ட கடன் அட்டை வழங்கும் அங்குரார்ப்பன நிகழ்வு யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ் போதனா வைத்தியசாலையும்,தாதியர் பயிற்சி கல்லூரியும் இணைந்து இன்று முன்னெடுத்த சர்வதேச தாதியர் தின நிகழ்வில்,யாழ் ஹட்டன் நேஷனல் வங்கியின் மெட்ரோ கிளையினரும் பங்காளர்களாக இணைந்து கொண்டு தாதியர்களுக்கென விசேடமாக அறிமுகப்படுத்தப்பட்ட கடன் அடடைகளை வழங்கி வைத்தனர்.
குறித்த நிகழ்வு யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சி கல்லூரியில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் யாழ் ஹட்டன் நேஷனல் வங்கியின் மெட்ரோ கிளையின் செயற்பாடு முகாமையாளர் சி.மயூரன்,யாழ் ஹட்டன் நேஷனல் வங்கியின் உறவு நிலை முகாமையாளர் டசிகா ஜனகன்,பொது வைத்திய நிபுணர் பேரானந்தராஜா,தாதியர் பயிற்சி கல்லூரி அதிபர் ஜெயக்குமார், பிரதம தாதிய பரிபாலகர் சந்திர மவுலீசன்,தாதிய பரிபாலகர் சூரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்