சில இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட செய்திகளில் தனது சிறப்புரிமைகளை மீறப்பட்டுள்ளதாகவும் இதனை நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழுவின் ஊடாக விசாரணை ...
சில இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட செய்திகளில் தனது சிறப்புரிமைகளை மீறப்பட்டுள்ளதாகவும் இதனை நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழுவின் ஊடாக விசாரணை நடத்துமாறு சபாநாயகரிக்கு கடிதமொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றிலேயே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன் உண்மைக்கு புறம்பான தனிப்பட்ட செய்திகளை வெளியிடும் ஊடக நிறுவனங்களை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிற்கு அழைக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த 24 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் பெரிதும் பயன்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் அவரது சிறப்புரிமைகள் பாரியளவில் மீறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.