நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சோபகிருது வருட(2023) உற்சவத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண மாநகரசபைக்கு காளாஞ்சி கொடுக்கும் நிகழ்வு இன்று(20) இடம்பெற...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சோபகிருது வருட(2023) உற்சவத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண மாநகரசபைக்கு காளாஞ்சி கொடுக்கும் நிகழ்வு இன்று(20) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ் மாநகரசபை ஆணையாளர், உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்களுடன், நல்லூர் கந்தசுவாமி ஆலய நிர்வாகத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்சியாக 25 தினங்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.