மத்தியில் உள்ள ஒருவர் மாகாணவிடயங்களை கையாளுவது என்பது மாகாண சபை முறைமையை நலிவுற செய்யும் விடயம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்ச...
மத்தியில் உள்ள ஒருவர் மாகாணவிடயங்களை கையாளுவது என்பது மாகாண சபை முறைமையை நலிவுற செய்யும் விடயம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்தார்
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி பொறுப்பேற்றுமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்
சத்தியமூர்த்தி அவர்கள் மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியில் உள்ளார் அந்த பணிப்பாளர் பதவியை துறந்து விட்டு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் பதவினை பெறுவதாயின் எந்தவித ஆட்சேபனையும் இல்லை
ஆனால் அவர் மத்திய அரசின் கீழ் செயற்படும் யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையின் பணிப்பாளராக கடமை ஆற்றிக் கொண்டிருக்கும் அதேவேளை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியையும் பொறுப்பேற்று இருப்பது என்பது எமது மாகாண சபையின் முறைமையினை நலிவுறசெய்யும் என்பதுதான் எமது ஆதங்கம் எனினும்இந்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.