தென் கிழக்கு வங்காள விரிகுடாவை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை எதிர்வரும் சில தினங்களில் சூறாவளியாக வலுவடையக்கூடும் என வளிமண்...
தென் கிழக்கு வங்காள விரிகுடாவை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை எதிர்வரும் சில தினங்களில் சூறாவளியாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதன் காரணமாக தென் கிழக்கு வங்காள விரிகுடாவைப் பயன்படுத்தும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, மேல், சபரகமுவ, மத்திய, வட மேல், தென், வட மாகாணத்தின் சில பகுதிகளிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேல் மற்றும் தென் கரையோரங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் இடைக்கிடையே பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 5 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.