தையிட்டியில் விகாரையை அகற்றக்கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தலைமையில் போராட்டம் இடம்பெற்று வரும் நிலைய...
தையிட்டியில் விகாரையை அகற்றக்கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தலைமையில் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் விகாரை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு போராட்டத்தில் ஈடுபடுவோரை
சந்தித்து கலந்துரையாடி விட்டு வெளியில் வரும்போது மக்களோடு மக்களாக நின்ற ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் இந்தப் பகுதியில் நிறைய பிரச்சனைகள் உள்ளது ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் வருவதில்லை என முனுமுனுத்த போது யார் இவர் என சிறீதரன் எம்பி வினவியபோது ஐக்கிய தேசிய ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் என தெரிவித்ததையடுத்து குறித்த உறுப்பினரை நோக்கி நீங்கள் போய் உங்கட எம்பிமாரை கூட்டி கொண்டு வந்து பாருங்கோ அதை விடுத்து கதைக்க வேண்டாம் அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் இவ்வாறு கதைக்க கூடாது என கடும் தொனியில் கூறினார்.