இலங்கையில் திரையிடப்பட்டுள்ள “பொன்னியின் செல்வன்” திரைப்படம், கடந்த 3 தினங்களில் பல கோடி ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்...
இலங்கையில் திரையிடப்பட்டுள்ள “பொன்னியின் செல்வன்” திரைப்படம், கடந்த 3 தினங்களில் பல கோடி ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டிலுள்ள பெரும்பாலான திரையரங்குகளில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ள இந்த திரைப்படம், கடந்த மூன்று தினங்களில் மாத்திரம் 200 கோடி ரூபாவை தாண்டிய வருமானத்தை ஈட்டியுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் திரையிடப்பட்டுள்ள “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் வருமானம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தை இலங்கையிலும் லைகா நிறுவனம் விநியோகித்துள்ளதுடன், அதற்கு பூரண அனுசரணையை லைகா நிறுவனத்திற்கு சொந்தமான தமிழ் FM வழங்கியுள்ளது.