யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பகுதியில் வாள் செய்து கொண்டிருந்த குற்றச்சாட்டில் கைதான ஒருவர் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பகுதியில் வாள் செய்து கொண்டிருந்த குற்றச்சாட்டில் கைதான ஒருவர் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைதானவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைதான மற்றுமொருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் வாள் செய்து கொண்டிருந்த நான்கு பேரை காங்கேசன்துறை காவல்துறையினர் அண்மையில்; கைது செய்தனர்.
காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வீட்டினை சுற்றி வளைத்து தேடுதலில் ஈடுபட்டனர்.
இதன்போது வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல்துறை விசாரணைகளின் பின்னர் இருவர் விடுவிக்கப்பட்டனர்.
ஏனைய இருவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது, வாள் தயாரிப்பில் ஈடுபட்ட பிரதான சந்தேகத்துக்குரியவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.