இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் முன்னாள் பொதுச் செயலாளர் சரா புவனேஸ்வரன் அவர்களது மணிவிழா நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றத...
இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் முன்னாள் பொதுச் செயலாளர் சரா புவனேஸ்வரன் அவர்களது மணிவிழா நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
நல்லூரில் அமைந்துள்ள சயன்ஸ் அக்கடமி கல்வி நிலைய வளாகத்தில் இன்று மணிவிழா, மணிவிழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் வைத்திய கலாநிதி லயன். வை. தியாகராஜா தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் விழா நாயகன் மங்கள வாத்தியங்கள் முழங்க விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். தொடர்ந்து ஆசியுரைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வெற்றி தேர்வு நூல் வெளியீடு இடம் பெற்றது.
நூல் வெளியீட்டினை தொடர்ந்து அதிதிகளின் வாழ்த்துரைகள் இடம் பெற்றன. வாழ்த்துரை நிறைவில் பொதுச் சேவையில் ஈடுபட்டோர் கௌரவிக்கப்பட்டனர்.
கௌரவத்தின் பின்னர் மணிவிழா ஏற்பாட்டு குழு சார்பில் இன்றைய மணிவிழாவின் நாயகனான சரா. புவனேஸ்வரன் அவர்களுக்கு “பல்துறை வித்தகர்” எனும் கௌரவ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது தொடர்ந்து “பல்துறை நாயகன் சரா்புவனேஸ்வரன்” மணிவிழா மலரும் வெளியிடப்பட்டது.