01.லூசி திரைப்பட பயணத்தில் உங்களுக்கான சவால்கள் எப்படி இருந்ததது? என்னைப் பொறுத்தவரையில் ஒரு பெண் என்றாலே சவால்களைத் தாண்டித்தான் தன்னுடைய வ...
01.லூசி திரைப்பட பயணத்தில் உங்களுக்கான சவால்கள் எப்படி இருந்ததது?
என்னைப் பொறுத்தவரையில் ஒரு பெண் என்றாலே சவால்களைத் தாண்டித்தான் தன்னுடைய வாழ்க்கையை வெற்றி கொள்ள வேண்டும் அந்த வகையில் லூஸி திரைப்படம் ஆனது நான் விரும்பி எடுத்த தெரிவு ஆகையால் சவால்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை
02.உங்களுடன் கூட நடிச்ச நடிகர்களுடனான கெமிஸ்ட்ரி எப்பிடி இருந்தது?
நல்லது கெட்டது இது இரண்டும் கலந்ததே மனித இயல்பு அந்த வகையில் அனைத்து விதமான பண்புகளயும் கொண்டவர்கள் அனைவரும் எனவே அதை எனது சாமர்த்தியத்தால் எனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டேன்
03.இயக்குனருக்கும் உங்களுக்குமான Coordination எப்படி இருந்தது?
குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால் எனது இயக்குனரின் தனிப்பட்ட முடிவு தான் நான் லூஸி ஆக தேரிவு செய்யப்பட்டது வெறுமனை லூஸி ஆன இயக்குனராக நில்லாது ஒரு நல்ல குருவாக மாறிவிட்டார். என்னை இயக்குனர் ஈழவாணி ஒரு சிறந்த நடிகையாக ஏற்றுக் கொண்ட முதல் இயக்குனர்
04.இந்தக் கதையினை தெரிவு செய்ததற்கான காரணம்?
சினிமா மீதான காதல் ஒரு நல்ல திரைப்படத்திற்கான அவா ஆக மாறுகிறது அதன்படி தேடலில் கிடைத்த பொக்கிஷம் தான் லூஸி முதல் தெரிவே எனக்கு ஜாக்பாட் ஆக அமைந்தது என்பது திரைப்படத்தை பார்க்கும் போது அனைவரும் தெரிந்து கொள்வார்கள்
05.இந்தப்படம் உங்களுக்கு ஒரு மைல் கல்லா இருக்கும் எண்டு நினைக்கிறிங்களா? இந்த திரைப்படத்திற்கு வரவேற்கத்தக்க விமர்சனங்களும் அதே நேரம் எதிர்மறையான விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கிறது, இதை எல்லாம் தாண்டி இந்தப்படம் ஒரு பெரிய வரவேற்பை பெறுமா?
நிச்சயமாக இது ஒரு சிறந்த படைப்பு அதன் நாயகி ஆகியது என் சினிமா பயணத்தின் முதல் வெற்றி என பெருமை அடைகின்றேன் விமர்சனம் தான் என்னை தனிப்பட்ட முறையில் ஒரு துணிச்சலான பெண்ணாக மாற்றியது அதேபோல் ஒரு நல்ல படைப்பாளிக்கு இரு வேறுபட்ட விமர்சனமும் அவசியம் தான் என் தனிப்பட்ட கருத்து விமர்சனங்களை பெரிது படுத்தாது எமது படைப்பை மக்களிடம் கொண்டு செல்ல பணியாற்றுவதுதான் இறுதியாக லூஸியில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்