3 போட்டிகள் கொண்ட ஆப்கானிஸ்தான் - இலங்கை ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஒரு நாள் போட்டி நாளை (02) சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம...
3 போட்டிகள் கொண்ட ஆப்கானிஸ்தான் - இலங்கை ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஒரு நாள் போட்டி நாளை (02) சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
மூன்று போட்டிகளும் சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் பகல் போட்டிகளாக நடைபெறவுள்ளது.
அதன்படி நாளை காலை 10 மணிக்கு முதல் ஒரு நாள் போட்டி தொடங்க உள்ளது.
இப்போட்டியில் இணையும் இலங்கை அணி இன்று மகிந்த ராஜபக்ச மைதானத்தில் தமது கடைசி பயிற்சியில் இணைந்ததுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் மஹேல ஜயவர்தனவும் அதில் இணைந்துகொண்டார்.
நாளைய போட்டியில் காயமடைந்த வனிந்துவுக்குப் பதிலாக துஷான் ஹேமந்த விளையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.