உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. அதற்கமைய இலங்கையில் தங்கத்தின் விலையானது தளம்பல் நிலையில்...
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
அதற்கமைய இலங்கையில் தங்கத்தின் விலையானது தளம்பல் நிலையில் காணப்படுகிறது.
அந்தவகையில், இன்றையதினம் தங்கத்தின் விலையானது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சி கண்டுள்ளது.
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 567,208 ரூபாவாக காணப்படுகின்றது.
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 160,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 146,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேசமயம், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 140,100 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,010 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 18,350 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 17,510 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என கூறப்படுகிறது.