யாழ்ப்பாணம் புங்குடுதீவு வாணர் பாலத்திலிருந்து உழவு இயந்திரமொன்று சரிந்து கடலில் வீழ்ந்துள்ளது . இந்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது. ...
யாழ்ப்பாணம் புங்குடுதீவு வாணர் பாலத்திலிருந்து உழவு இயந்திரமொன்று சரிந்து கடலில் வீழ்ந்துள்ளது . இந்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது.
அமைச்சரின் பாராமுகம்
புங்குடுதீவு மக்களின் நிதியில் அமைக்கப்பட்ட ஐந்து கிலோமீற்றர் நீளமான இக்கடற்பாதையில் பயணிப்பவர்கள் வார்த்தைகளினால் கூறமுடியாதளவுக்கு துன்பங்களை அனுபவித்துவருகின்றதாக சமூக ஆர்வலகள் கூறுகின்றனர்.
நீண்டகாலமாக இலங்கையின் நீளமான கடற்பாதையாக புங்குடுதீவு வாணர் பாலம் காணப்படுகின்றது . மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் இப்பாலத்தினை புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது .
எனினும் பின்னர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அந்நிதி ஒதுக்கீடு மீளப்பெறப்பட்டு புனரமைப்பு பணி திட்டம் முழுமையாக நிறுத்திவைக்கப்பட்டது .
இந்நிலையில் முப்பது ஆண்டுகளாக மத்திய அமைச்சராக குப்பை கொட்டுகின்ற டக்ளஸ் தேவானந்த இதுகுறித்து எதுவித அக்கறையும் செலுத்துவதாக இல்லை எனவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர் .
மேலும் தீவக மக்களின் வாக்குகளால் 1994 ல் நல்ல வாழ்க்கையை அனுபவிக்க தொடங்கிய டக்ளஸ் தேவானந்த, தனக்கு வாக்களித்த மக்களின் குறைகளை கண்டுகொள்வதில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.