கடவுச்சீட்டுப் பெறுவதற்கான கைவிரல் அடையாளம் பெறும் செயன்முறை தென்மராட்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்கான கை...
கடவுச்சீட்டுப் பெறுவதற்கான கைவிரல் அடையாளம் பெறும் செயன்முறை தென்மராட்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்கான கைவிரல் அடையாளத்தைப் பதிவு செய்யும் நடைமுறை இன்று புதன்கிழமை (21) தென்மராட்சிப் பிரதேச செயலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த செயற்திட்டத்தினை தென்மராட்சிப் பிரதேச செயலர் ஆரம்பித்து வைத்திருந்தார்.
ஒன்லைன் முறையில் விண்ணப்பித்து கடவுச்சீட்டுப் பெறுவதற்கான கைவிரல் அடையாளத்தை பதிவு செய்வதற்கு யாழ் மாவட்டத்தில் தென்மராட்சி மற்றும் பருத்தித்துறை ஆகிய இரண்டு பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.