மூன்று பிள்ளைகளின் தாயான 29 வயதுடைய பெண் ஒருவர், மீன் வியாபாரியால் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டு, தவறான முறையில் சிறை வைக்கப்பட்ட சம்...
மூன்று பிள்ளைகளின் தாயான 29 வயதுடைய பெண் ஒருவர், மீன் வியாபாரியால் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டு, தவறான முறையில் சிறை வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் கம்புருபிட்டிய மஸ்தகமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து மீட்கப்பட்டதாக மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், தான் ஓடிப்போனால் கணவன் மற்றும் குழந்தைகளை கொன்று விடுவதாகவும், நிர்வாண வீடியோக்களை எடுத்து இணையத்தில் வெளியிடுவேன் என்றும் மீன் வியாபாரியால் அச்சுறுத்தப்பட்டதையடுத்து, குறித்த வீட்டில் சுமார் 6 மாதங்கள் தங்கியிருந்த பெண்ணே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட பெண்ணிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர். பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலைமுடியை வெட்டி கத்தியை காட்டி மிரட்டி பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளானதாகவும் அந்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இதன்படி, மாத்தறை நீதவான் நீதிமன்றில் உத்தரவு பெறப்பட்டு, சந்தேகநபரின் வீட்டைச் சோதனையிட்ட போது, குறித்த பெண்ணை அச்சுறுத்தப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 05 மீன் வெட்டுக் கத்திகள் மற்றும் குத்துவிளக்கு என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, அவரது நிர்வாண காட்சிகள் பதிவாகியிருந்த தொலைபேசி மற்றும் மெமரி கார்டுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோக்களும் தொலைபேசியில் இருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
36 வயதுடைய சந்தேக நபர் குறித்த மூன்று பிள்ளைகளின் தாயாரின் உறவினர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.