தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றால் பிணையில் விடுதல...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு செய்ததாக குற்றம்சுமத்தி இன்று காலை அவர் கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பின்னர் இன்று மாலை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.