இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் ஜூலை 25 ஆம...
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு தீர்ப்பு அறிவிப்பதற்காக இன்று (06) எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் ஆகியோர் தீர்ப்பை ஜூலை 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தனர்.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிரித்தானிய பிரஜை என்பதால் இந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அமர அவர் தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி சமூக ஆர்வலர் ஓசல ஹேரத் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.