வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்;ஸ் வடக்கின் 5 மாவட்டங்களினதும் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலரால் இந்த ந...
வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்;ஸ் வடக்கின் 5 மாவட்டங்களினதும் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலரால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநராக கடந்த மாதம் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் மீண்டும் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைமைப் பதவி வழங்கப்படவில்லை. இதனால் வடக்கின் 5 மாவட்டங்களிலும் அண்மையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வடக்கின் 5 மாவட்டங்களினதும் ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக அவரை ஜனாதிபதியின் செயலர் நியமித்து மாவட்டச் செயலகங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.