தியாகி பொன். சிவகுமாரனது 49 ஆவது நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று மத...
தியாகி பொன். சிவகுமாரனது 49 ஆவது நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று மதியம் 12 மணியளவில் மாணவர்களால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
பொன் சிவகுமாரனது உருவப்படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.
பொன்.சிவகுமாரன் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி 1974 யூன் 5ம் திகதி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.