பெண் ஒருவருடன் தவறான உறவில் ஈடுபட்ட புகைப்படங்களை கணவரிடம் காட்டப் போவதாக அச்சுறுத்தி நகைகளை அபகரித்த இளைஞர் பொலிஸாரினால் கைது செய்துள்ளனர்....
பெண் ஒருவருடன் தவறான உறவில் ஈடுபட்ட புகைப்படங்களை கணவரிடம் காட்டப் போவதாக அச்சுறுத்தி நகைகளை அபகரித்த இளைஞர் பொலிஸாரினால் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர், பெண் ஒருவருடன் தவறான தொடர்பை ஏற்படுத்திக்கொண்டதன் பின்னர், அவரை அறையொன்றுக்குள் அழைத்துச் சென்று, எடுக்கப்பட்ட புகைப்படங்களை பெண்ணின் கணவரிடம் காண்பிக்கப்போவதாக சந்தேக நபரான இளைஞர் தெரிவித்துள்ளார்.
பின்னர், அந்த பெண்ணிடமிருந்த 1,785,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளை இளைஞர் பலவந்தமாக பெற்றுச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸாருக்கு நேற்று (19) காலை முறைப்பாடு கிடைத்துள்ளது.
இதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமஸ்வத்த பிரதேசத்தில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு, கோமஸ்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர் ஆவார்.