புஷ்பக27 முழு நீளத் திரைப்படத்தின் குறுந்திரை முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்வானது, நேற்றைய தினம் புதன்கிழமை மாலை 06.30 மணியளவில் யாழ்ப்பாணம் ...
புஷ்பக27 முழு நீளத் திரைப்படத்தின் குறுந்திரை முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்வானது, நேற்றைய தினம் புதன்கிழமை மாலை 06.30 மணியளவில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள நித்திலம் கலையகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் இரகுராம், வைத்திய கலாநிதி சிவன்சுதன், ஈழத்தின் மூத்த திரைப்பட நடிகர் இராஜமகேந்திரசிங்கம், மூத்த ஊடகவியலாளர் இரா பாரதி, கருவி நிறுவனத் தலைவர் சிவாஜி சேகரம், மூத்த ஊடகவியலாளர் கணபதி சர்வானந்தா, திரைப்பட ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் புஷ்பக27 திரைப்பட கலைஞர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
புஷ்பக27 திரைப்படத்தின் குறுந்திரை முன்னோட்டத்தினை பேராசிரியர் இரகுராம், வைத்திய கலாநிதி சிவன்சுதன், திரைப்பட நடிகர் இராஜமகேந்திரசிங்கம் ஆகியோர் இணைந்து வெளியிட்டு வைத்தனர். தொடர்ந்து பேராசிரியர் இரகுராம், வைத்திய கலாநிதி சிவன்சுதன், ஊடகவியலாளர் இரா பாரதி ஆகியோர் சிறு கருத்துரைகளை வழங்கினர்.
முடிவில் புஷ்பக27 திரைப்பட இயக்குநர் காரை சிவநேசன் தனது கருத்துக்களை தெரிவித்ததுடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வார பகுதியில் திரைப்படம் திரைக்கு வரும் எனவும் யாழ்ப்பாணத்தில் மூன்று காட்சிகளை காட்சிப்படுத்த ஏற்பாடுகளை முன்னெடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.