அமைச்சர் சரத் வீரசேகரவிடம் Sarath Weerasekara உன்னை பற்றி தவறாக கூறி உன்னை இல்லாமல் பண்ணி விடுவேன் என வவுனியாவிலிருந்து யாழ்ப்பாண இளைஞனுக்கு...
அமைச்சர் சரத் வீரசேகரவிடம் Sarath Weerasekara உன்னை பற்றி தவறாக கூறி உன்னை இல்லாமல் பண்ணி விடுவேன் என வவுனியாவிலிருந்து யாழ்ப்பாண இளைஞனுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியாவில் 136, பசார் வீதி, எனும் முகவரியை சேர்ந்த தேவராசா கோபாலகிருஷ்ணன் என்பவராவால் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக யாழைச் சேர்ந்த இளைஞன் இன்றைய தினம் (25-07-2023) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு இலக்கம் 2023/07/22 ம் திகதி CIB 2 212/296 எனும் இலக்கத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழில் உள்ள குறித்த நபரின் உறவினருக்கு 2 இலட்சம் ரூபா கடனாக கொடுத்த நிலையில் அதனை தருமாறு பலமுறை கேட்ட நிலையில் வழங்காத நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன்.
மேற்படி முறைப்பாடு தொடர்பாக யாழ் பொலிஸார் சம்மந்தப்பட்டவர்களுக்கு விசாரணைகள் முன்னெடுக்க அழைப்பு விடுத்த பின்னர் வவுனியா நபர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் சரத் வீரசேகரவுடன் தொடர்பு உள்ளதாகவும் தான் அவருக்கு என்னை பற்றி தவறாக கடிதம் ஒன்றை அனுப்பி என்னை இல்லாமல் செய்து விடுவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, தனக்கு பல அடியாட்கள் குழு இருப்பதாகவும் அவர்களை கொண்டு வந்து என்னை கொலைசெய்து விடுவேன் என்றும் தனித்தனியாக சண்டை செய்ய வா எனக்கூறியும் எனது சகோதரி மற்றும் தாயார் மற்றும் என்னை அசிங்கமான முறையில் ஏசி உள்ளார்.
நான் எனது தந்தையை இழந்த நிலையில் கற்றல் நடவடிக்கையை மேற்கொண்டு எனது குடும்பத்தையும் பாதுகாத்து வருகிறேன்.
இந்நிலையில்,எனக்கு கொலை அச்சுறுத்தல் விடப்பட்ட நிலையில் எனக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.