யாழ்.மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளால் பாரம்பரிய மீனவர்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்...
யாழ்.மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளால் பாரம்பரிய மீனவர்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,
பாரம்பரியமாக கடத்தொழில் ஈடுபட்டுவரும் மீனவர்களின் தொழில் முறைகளையும் வாழ்க்கை முறைகளுக்கும் இடையூறு விளைவிக்க கூடிய வகையில் கடல் அட்ட பண்ணைகள் அமைந்துள்ளது.
அரசாங்கம் என்ற வகையில் மீனவ சமூகங்களுக்கு பாதிப்பு இல்லாமல் அவர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கியதாக புதிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
கடல் மேலாண்மை என்ற பெயரில் வடக்குக் கடற்பரப்பில் அதுவும் யாழ்.குடாக் கடலை ஆண்டிய பகுதியில் அதிகமாக அட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வடக்கில் மேற்கொள்ளப்படும் கடல் அட்டைப் பண்ணையால் பாரம்பரிய தொழில் முறைகளில் மீன் பிடித்தலை மேற்கொள்ளும் சமூகம் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.
பாரம்பரியமாக கடலை நம்பி மீன்பிடித்தலை மேற்கொள்ளும் சமூகங்களின் விருப்பமின்றி அரசாங்கம் அட்டை பண்ணைகளை அமைப்பது தவறு.
ஆகவே பாரம்பரிய கடத்தொழில் மக்களின் இயல்பு வாழ்க்கையை பறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட அட்டைப் பண்ணைகள் அவர்களின் உரிமைகளை பறிப்பதாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.



