முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதோடு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு...
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதோடு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு பேரணியும் நடத்தப்படுகின்றது.
இதனால் வடக்கில் உள்ள பல நகரங்கள் முற்றாக முடங்கிய நிலையில் காணப்படுகின்றது. இந்நிலையில் தென்மராட்சியின் முக்கிய நகரமான சாவகச்சேரி நகரத்தில் உள்ள உணவகங்கள் தவிர்ந்த மருந்தகங்கள் உட்பட்ட அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதோடு பொதுச்சந்தையும் முற்றாக மூடப்பட்டுள்ளது.
இதே நேரம் அரச தனியார் வங்கிகளும் பிரதான வாயில்களை மூடி வாடிக்கையாளர் சேவைகளை வழங்குவதை முற்றாக தவிர்த்துள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட தனியார் பேருந்துகள் போக்குவரத்தில் ஈடுபடாமையினால் அரச உத்தியோகத்தர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதையும் காணக்கூடியதாக இருந்தது.