இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய பெரும் செல்வந்தரான கௌதம் அதானியை சந்தித்துள்ளார். இதன்போ...
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய பெரும் செல்வந்தரான கௌதம் அதானியை சந்தித்துள்ளார்.
இதன்போது, கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தி, 500 மெகாவொட் காற்றலை மின்உற்பத்தி திட்டம் மற்றும் பசுமை ஐதரசன் திட்டம் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக கௌதம் அதானி, ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டெல்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலைiயும் சந்தித்து ஜனாதிபதி முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.