கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இலங்கை தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அமைச்சராக நேற்று பதவியேற்றுள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியி...
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இலங்கை தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அமைச்சராக நேற்று பதவியேற்றுள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியுமான வீ.ஆனந்தசங்கரியின் புதல்வரே ஹரி ஆனந்தசங்கரி என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, குடியரசு – முதல் குடியினர் உடனான உறவுகள் அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி பதவியேற்றுள்ளதாக அந்நாட்டு அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஹரி ஆனந்தசங்கரி 2015 ஆம் ஆண்டு ஸ்காபரோ-ரூஜ் பார்க் பாராளுமன்ற உறுப்பினராக முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கு முன்னர் கனடாவின் நீதி அமைச்சரின் பாராளுமன்ற செயலாளராகவும், கனடாவின் சட்டமா அதிபராகவும், அரச-சுதேசி உறவுகள் அமைச்சரின் பாராளுமன்ற செயலாளராகவும், கனடிய பாரம்பரியம் மற்றும் பன்முக கலாசார அமைச்சரின் பாராளுமன்ற செயலாளராகவும் (பன்முக கலாசாரம்) பணியாற்றியுள்ளார்.