இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தை ஆராய விண்ணில் செலுத்தியுள்ளது. வருகின்ற 23 ஆம் திகதி விண்கலம் நிலவில் தரையிறங்கும் என...
இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தை ஆராய விண்ணில் செலுத்தியுள்ளது.
வருகின்ற 23 ஆம் திகதி விண்கலம் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திரயான்-3 போன்று நிலவின் தென்துருவத்தை ஆராய ரஷ்யா லூனா-25 என்ற விண்கலத்தை உருவாக்கியுள்ளது.
இந்த விண்கலம் ரொக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் 5 நாட்கள் பயணம் செய்து நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடையும் என்றும், பின்னர் 5 முதல் 7 நாட்கள் சுற்றுவட்டப் பாதையில் பயணம் செய்து நிலவில் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் அதே நாளில் ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் தரையிறங்கவுள்ளது.