2019ஆம் ஆண்டு மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 29 மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்ததா...
2019ஆம் ஆண்டு மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 29 மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவரை அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மேலதிக நீதவான் எஸ்.அன்வர் இன்று (31) உத்தரவிட்டார்.
தற்போது ஓய்வு பெற்ற 61 வயதுடைய சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, அவருக்காக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகவில்லை.
இதற்கு முன்னர், நான்கு மாணவிகள் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதிலும், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
பின்னர், மாகாண கல்வி அமைச்சு மேற்கொண்ட விசாரணையின் போது, அவர் 29 மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்திருப்பது தெரியவந்துள்ளது.