நவரட்ணம் லக்ஷ்சுமியின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி - ஊற்றுப்புலம் பகுதியில் அமைந்துள்ள சிறகுகள் இலவச கல்வி நிலையத்தில் கல்...
நவரட்ணம் லக்ஷ்சுமியின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி - ஊற்றுப்புலம் பகுதியில் அமைந்துள்ள சிறகுகள் இலவச கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான மதிய போசனம் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்று அவுஸ்திரே யாவில் வசிக்கும் அருணாச்சலம் சிறிதரன் என்பவர் நேரில் சென்று இந்த மதிய உணவு வழங்கல் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த கல்வி நிலையமானது மிகவும் பின்தங்கிய கிராமத்தில் உள்ளது. இந்நிலையில் அங்கு வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட சிறார்களே கல்வி கற்று வருகின்றார்கள். அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தன்னார்வ ரீதியில் மாணவர்களுக்கு கல்வியை புகட்டி வருகின்றனர்.
அந்த வகையில் குறித்த கல்வி நிலையத்தில் கல்வி நிலையத்தை பார்வையிட்ட சிறிதரன் அந்த கல்வி நிலைய்திற்கு தேவையான அடிப்படை வசதிகளையும் வழங்க முன்வருவதாக கல்வி நிலையத்தினருக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.