யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் அதிகாரி ஒருவர் அங்கு கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுடன் அங்க...
யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் அதிகாரி ஒருவர் அங்கு கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுடன் அங்க சேட்டையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் குறித்த அதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது யாழ் மாவட்டத்திலுள்ள பிரதேச பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பு அதிகாரியே அங்கு கடமையாற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பெண் கான்ஸ்டபிளுடன் சேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பொறுப்பதிகாரியின் பாலியல் சேட்டை தொடர்பில் குறித்த பெண் கான்ஸ்டபிள் உயர் மட்டங்களுக்கு தெரியப்படுத்திய நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை விசாரணைகளுக்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில் தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.7