இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவம் தற்போது பேசுபொருளாகஉருவாகியுள்ளது. குறித்த ஆலயத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தி...
இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவம் தற்போது பேசுபொருளாகஉருவாகியுள்ளது.
குறித்த ஆலயத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்திய கூட்டமொன்றில் அவர்கள் வழங்கிய போதனைக்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், குறித்த கூட்டத்தை உடனடியாக நிறுத்தி போதனையாளர்களையும் வெளியேற்றியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பலாங்கொடை மற்றும் இரத்தினபுரியை மையப்படுத்தி செயல்படும் செயல்பாட்டாளர்கள் இன்று காலை 10 மணியளவில் கூட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
இக்கூட்டத்தில் இறக்குவானை நகர் மற்றும் அண்டிய தோட்டப்பகுதியில் உள்ள மக்களை இவர்கள் அழைத்துள்ளனர். கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்களுக்கு தீவிர இந்து மதப் போதனைகளை வழங்குவதாக சிலர் கூச்சலிட்டுள்ளனர்.
இதையடுத்து ஆலய நிர்வாக சபையினர் இதில் தலையிட்டுள்ளனர்.
தீவிர இந்து மதப் போதனைகளுக்கு அனுமதிக்க முடியாதெனவும், இது மதவாத போக்கு வழிவகுக்கும் எனவும் கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டு போதனைக்காக வந்தவர்களும் ஆலய நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் இவ்வாறான போதனைகளுக்கு அனுமதியளிக்கப்படாது எனவும் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ட்ரூசிலோன் பொலிஸ் ஊடகப்பேச்சாளரிடம் வினவியது,
மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை தமக்கு எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லை என்றும், முறைப்பாடுகள் கிடைத்தால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ் என்றால் என்ன?
ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் (RSS Pracharak) என்பது ராஷ்டிரிய சுயம்சேவக சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) முழுநேர ஊழியரைக் குறிக்கும். இச்சங்கத்தின் கூட்டங்களுக்கும், பயிற்சி வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்தல், பொதுக் கூட்டங்களில் விரிவுரை ஆற்றுவது, இந்து தேசியம், இந்துத்துவா போன்ற தத்துவங்களை இந்துக்களிடையே பரப்புதல், சங்கப் பரிவார் அமைப்புகளுக்கு தேவையான வழிகாட்டுதல் போன்றவையே ஒரு பிரச்சாரகரின் முக்கியப் பணிகள் ஆகும்.